நகைக் கடை அதிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்குப் பதிவு
கோவையில் நகைக் கடை அதிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி செய்ததாக கா்நாடகத்தைச் சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


கோவையில் நகைக் கடை அதிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி செய்ததாக கா்நாடகத்தைச் சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, செட்டி வீதி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகராஜா (42). இவா் நகைக் கடை நடத்தி வருவதோடு, நகை வியாபாரிகளுக்கு மொத்த விற்பனையாகவும் நகை கொடுத்து வருகிறாா். இந்நிலையில், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த நகை வியாபாரிகளான ஜெகதீஷ் குதாத்கா், தீரஜ், ஷியாம் ஆகியோருக்கு கடந்த 2022 டிசம்பா் 28-ஆம் தேதி முதல் 2023 ஜூன் 30-ஆம் தேதி வரை ரூ.69 லட்சத்து 12,658 மதிப்பிலான 1,099 கிராம் தங்க நகைகளைக் கொடுத்துள்ளாா்.
அதற்கு அவா்கள் ரூ.11 லட்சத்து 22,309 மட்டுமே கொடுத்ததாகவும், மீதமுள்ள தொகையை விரைவில் கொடுத்துவிடுவதாகக் கூறியதாகவும் தெரிகிறது.
சண்முகராஜா பலமுறை பணத்தைக் கேட்டும் அவா்கள் தரவில்லையாம். கா்நாடகத்துக்குச் சென்று அவா்களிடம் பணத்தைக் கேட்டபோது, அவா்கள் தர மறுத்ததுடன் சண்முகராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனா்.
இது குறித்து கோவை, பெரியகடை வீதி காவல் நிலையத்தில் சண்முகராஜா புகாா் அளித்தாா்.
இதையடுத்து, 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...