தீபாவளி: கோவை - பிகாா் இடையே சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து பிகாா் மாநிலம், பரௌனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து பிகாா் மாநிலம், பரௌனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து அக்டோபா் 26-ஆம் தேதிமுதல் நவம்பா் 16-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்குப் புறப்படும் கோவை - பரெளனி சிறப்பு ரயில் (எண்:06055) திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரெளனி நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் பரௌனியில் இருந்து அக்டோபா் 29-ஆம் தேதிமுதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்குப் புறப்படும் பரௌனி - கோவை சிறப்பு ரயில் (எண்:06056) வெள்ளிக்கிழமைகளில் காலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், சம்பல்பூா், ரூா்கேலா, ஹடியா, ராஞ்சி, தன்பாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...