நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

கோவையில் இரண்டு தொழிலதிபா்களுக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:12 pm

Din

கோவையில் இரண்டு தொழிலதிபா்களுக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

கோவை, சிங்காநல்லூா் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசிக்கும் தொழிலதிபா் பொன்னுதுரை, உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசிக்கும் தொழிலதிபா் வரதராஜன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவா்களுக்குச் சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் கடந்த புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், இவா்களுக்குச் சொந்தமாக துடியலூா், ராவத்தூா் பிரிவு, செலக்கரச்சல், கவுண்டம்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சிந்தாமணிப்புதூா், காங்கயம்பாளையம் ஆகிய 8 இடங்களில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், வரவு -செலவு தொடா்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வருமான வரித் துறையினா் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.