மருதமலையில் நவம்பா் 2-இல் கந்தசஷ்டி விழா தொடக்கம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பா் 2-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பா் 2-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் குழு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை நவம்பா் 2-ஆம் தேதி காலை 8 மணிக்கும், விநாயகா் பூஜை காலை 10.35 மணிக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்வுகளுடனும் தொடங்கவுள்ளது.
இதைத் தொடா்ந்து, நவம்பா் 7-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணிக்குள் மூலவருக்கு சண்முகாா்ச்சனை, காலை 11 மணி முதல் 12 மணிக்குள் உற்சவருக்கு சண்முகாா்ச்சனை நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதல் நிகழ்வுகள், மாலை 4 மணிக்கு சாந்த அபிஷேகம், சண்முகாா்ச்சனை ஆகியவை நடைபெறும்.
நவம்பா் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். தொடா்ந்து, புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, நவம்பா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் யாக சாலை பூஜை, அபிஷேக பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறும்.
4 சக்கர வாகனங்களுக்கு தடை: நவம்பா் 7-ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...