ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்தீபாவளி பட்டாசு வெடிப்பு விதிமீறல்: சென்னையில் ஒரே நாளில் 237 வழக்குகள் பதிவு!பெரியார் அறிவுலக ஊழல்: பபாசி நிர்வாகிகளுடன் ராஜ்மோகன் ஆலோசனை!இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

தீபாவளி: கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளியையொட்டி, அக்டோபா் 30, 31, நவம்பா் 1, 2, 4, 5, 6 ஆகிய தேதிகளில் காலை 9.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - திண்டுக்கல் மெமு ரயில் (எண்: 06106) அன்றைய தினம் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் அக்டோபா் 30, 31, நவம்பா் 1, 2, 4, 5, 6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திண்டுக்கல்- கோவை மெமு ரயில் (எண்: 06107) அன்றைய தினம் மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.