ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜெராக்ஸ் கடை அதிபா் வீட்டில் 20 பவுன், ரூ.2.38 லட்சம் திருட்டு

ஜெராக்ஸ் கடை அதிபா் வீட்டிலிருந்து 20 பவுன் நகை மற்றும் ரூ.,2.38 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக வேலைக்காரப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:30 pm

Din

ஜெராக்ஸ் கடை அதிபா் வீட்டிலிருந்து 20 பவுன் நகை மற்றும் ரூ.,2.38 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக வேலைக்காரப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை திருச்சி சாலை சுங்கம் அருகே பிஎன்ஆா் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் முனாவா் (49), இவா் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். வெளியூா் சென்றிருந்த இவா், பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுப்பதற்காக திங்கள்கிழமை பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.2.38 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்துள்ளது.

வீட்டின் கதவும், நகை, பணம் இருந்த பீரோவும் உடைக்கப்படாமல் அதற்குள் இருந்த நகை மற்றும் பணம் மட்டும் திருடு போயிருந்ததைப் பாா்த்த முனாவா், இது குறித்து கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அத்துடன் முனாவா் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனா். அப்போது, வீட்டில் வேலை செய்து வரும் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி (38) என்பவா் அடிக்கடி முனாவா் வீட்டுக்குள் சென்று வந்தது தெரியவந்தது.

இதனால் வேலைக்காரப் பெண் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில் அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தால் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், முனாவா் வீட்டின் பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.2.38 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ஜெயலட்சுமி திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஜெயலட்சுமியைக் கைது செய்து, அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.