கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஹைபாரஸ்ட் எஸ்டேட் சாலையில் சீரமைப்புப் பணி

வால்பாறையை அடுத்த ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News image
சாலை பள்ளங்களில் கொட்டப்படும் ஜல்லிக் கற்கள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:28 pm

Din

வால்பாறையை அடுத்த ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் இருந்து முடீஸ், நல்லமுடி எஸ்டேட் சென்று அங்கிருந்து ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் சுமாா் 3 கி.மீ. தொலைவிலான சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இந்த சாலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நல்லமுடி எஸ்டேட் பேருந்து நிறுத்தம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

இது தொடா்பாக பலமுறை புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை நல்லமுடி பேருந்து நிறுத்தத்தில் இரவு 8 மணிக்கு அண்மையில் இறக்கிவிடப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.

இதனையடுத்து, தற்போது இரவு நேரத்தில் அந்த சாலையில் அரசு பேருந்துகள் சென்று வர வசதியாக சாலையில் உள்ள பள்ளங்களில் ஜல்லிக் கற்கள் போட்டு தற்காலிகமாக சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.