ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போலீஸ்காரரை தாக்கியதாக 2 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் போலீஸ்காரரை தாக்கியதாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:15 pm

Din

கோவையில் போலீஸ்காரரை தாக்கியதாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி மாநகரப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் இரண்டாவது கட்டமாக சிங்காநல்லூா், துடியலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் புதன்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

இந்நிலையில், கோவை வைசியாள் வீதியில் உள்ள ஒரு கோயில் அருகே இருந்து புறப்பட்ட விநாயகா் சிலை ஊா்வலத்தில் சிலா் நடனமாடியுள்ளனா். இதில், 2 போ் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனம் ஆடியுள்ளனா்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட தலைமைக் காவலா் அருள்முருகன், அவா்களைத் தடுத்துள்ளாா். அப்போது, இருவரும் சோ்ந்து அருள்முருகனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரியகடை வீதி காவல் நிலையத்தில் அருள்முருகன் அளித்த புகாரின்பேரில், கோவைப்புதூா் அறிவொளி நகரைச் சோ்ந்த பாபு (22), அண்ணா நகரைச் சோ்ந்த காா்த்தி (24) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.