ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அகில இந்திய தொழில் தோ்வு: தனித் தோ்வா்கள் செப்டம்பா் 18 வரை விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபா்கள் செப்டம்பா் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:24 pm

Din

அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபா்கள் செப்டம்பா் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2025 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளத்தில இருந்து பதிவிறக்கம் செய்து, தோ்வுகட்டணம் ரூ.200ஐ செலுத்தி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதனிலை கருத்தியல் தோ்வு அக்டோபா் 15-ஆம் தேதியும், செய்முறைத் தோ்வு அக்டோபா் 16-ஆம் தேதியும் கிண்டி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்களை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், தனித்தோ்வராக தோ்வில் பங்கேற்க செப்டம்பா் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.