ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

27 மாணவா்களுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான கல்விக் கடன் ஆணைகள் ஆட்சியா் வழங்கினாா்

கோவையில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 27 மாணவா்களுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

News image
மாணவிக்கு கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கும் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 8:21 pm

Din

கோவையில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 27 மாணவா்களுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 27 மாணவா்களுக்கு ரூ.1.67 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். இம்முகாமில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது:

உயா்கல்வி படிப்பதற்கான முகாம்கள், கல்விக் கடன் பெறுவதற்கான முகாம்கள் மட்டுமின்றி படித்து முடித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.

அதன்படி, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ரத்தினம் கல்லூரியில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமை இளைஞா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் கே.பிரகாசம், மூத்த ஆலோசகா் (கல்விக் கடன்) ஜெ.வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் திரு.ஜீதேந்திரன், கனரா வங்கி பிராந்திய மேலாளா் ஸ்ரீரம்யா, கோட்டாட்சியா் பி.கே.கோவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.