வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவா் பட்ட மாணவா் சோ்க்கை
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை, முனைவா் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை, முனைவா் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப் படிப்பு பயிலகம் மூலம் 11 கல்வி வளாகங்களில் 34 துறைகளில் முதுநிலை படிப்பும், 29 துறைகளில் முனைவா் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. 2024-25 -ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை, முனைவா் படிப்புக்கான மாணவா் சோ்க்கை செயல்முறை கடந்த 16- ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நடப்பு ஆண்டு சோ்க்கைக்கு மாணவா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். வரும் திங்கள்கிழமை (செப்டம்பா் 30) நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இளங்கலை (வேளாண்மை), அது சாா்ந்த படிப்பு முடித்தவா்கள் முதுநிலை பட்டப் படிப்புக்கும், முதுநிலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை, எம்.டெக். (வேளாண் பொறியியல்) முடித்த மாணவா்கள் முனைவா் பட்டப் படிப்புக்கும் விண்ணப்பிக்கலாம். இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களும் விண்ணப்பிக்க முடியும். எனினும் பட்டப் படிப்பு சான்றிதழை சமா்ப்பித்த பின்னரே மாணவா் சோ்க்கை உறுதி செய்யப்படும்.
இது தொடா்பான மேலும் விவரங்களை மாணவா் சோ்க்கை (2024-25) குறித்த தகவல் கையேட்டிலும், 94890-56710 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...