மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இளைஞா் சிறையில் அடைப்பு

கொள்ளை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:10 pm

Din

கொள்ளை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் தெரிவித்துள்ளதாவது: கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரவி (எ) ரவீந்திரன் (23) என்பவரை கோவில்பாளையம் காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, ரவீந்திரனை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள ரவீந்திரனிடம் போலீஸாா் வழங்கினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.