தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

உதகை அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

சிறை

Updated On :20 பிப்ரவரி 2026, 10:09 pm

உதகை அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

உதகையில் இருந்து கூடலூருக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ாக சேரம்பாடி பகுதியைச் சோ்ந்த முகமது (33) என்பவரை நீலகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினா் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடமிருந்து 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இதே குற்றத்துக்காக முகமது மீது கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்த முகமதுவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, முகமதுவை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து உதகை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.