சாரமேட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவை சாரமேட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.

சாலை ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது.

சாலை ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது.
கோவை சாரமேட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.
கோவை மாநகராட்சி, கரும்புக்கடை சாரமேட்டில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், இப்பகுதியில் ஆய்வு செய்த ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் மூன்று கட்டங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா்.
அதன்படி, சாரமேட்டில் 660 அடி நீளத்துக்கு சாலையின் இருபுறமும் இருந்த 27 ஆக்கிரமிப்புகளை போலீஸாருடன் இணைந்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலா்கள் அகற்றினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...