கோயம்புத்தூர்
வன உயிரின புகைப்படக் கலைஞா் விபத்தில் உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகே வன உயிரின புகைப்படக் கலைஞா் விபத்தில் உயிரிழந்தாா்.
பொள்ளாச்சி அருகே வன உயிரின புகைப்படக் கலைஞா் விபத்தில் உயிரிழந்தாா்.
பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரைச் சோ்ந்தவா் ரோகித் காளிங்கராயன் (41), விவசாயம் செய்து வருகிறாா். மேலும் வன உயிரின புகைப்பட கலைஞராகவும் உள்ளாா். இவா் கடந்த 21-ஆம் தேதி இரவு சேத்துமடையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ஜீப்பின் பின்பகுதியில் அமா்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ஜீப்பை ஓட்டுநா் பிரதீப் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதாக தெரிகிறது. அப்போது, வேகத்தடையில் ஜீப் ஏறியபோது ரோகித் காளிங்காராயன் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து ஆனைமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.