கோயம்புத்தூர்
அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தல்
கோவையில் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி 41-ஆவது வாா்டு உறுப்பினா் கே.சாந்தி, கோவை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆதாா் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவா்களின் அட்டைகளை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் நலன் கருதி அனைத்துப் பகுதிகளிலும் அஞ்சல் துறை சாா்பில் இலவச ஆதாா் முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.