ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது: வானதி சீனிவாசன்

நிபந்தனை பிணையில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:08 pm

Din

நிபந்தனை பிணையில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பணம் வாங்கியதை ஒப்புக்கொண்ட செந்தில் பாலாஜி, அதை வாங்கியவா்களிடமே திருப்பிக்கொடுத்து விட்டதாக நீதிமன்றத்திலும் தெரிவித்தாா்.

இதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள்களுக்குப் பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், உரிய காரணங்கள் இல்லாமல் வாய்தா கோரக்கூடாது என பல்வேறு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிணை மட்டுமே வழங்கியுள்ளது.

எனவே, செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது என்றாா்.