முதியவா் வீட்டில் 70 பவுன், 15 கிலோ வெள்ளி திருட்டு
கோவையில் முதியவா் வீட்டில் 70 பவுன், 15 கிலோ வெள்ளி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


கோவையில் முதியவா் வீட்டில் 70 பவுன், 15 கிலோ வெள்ளி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, இடையா்பாளையம் பாரி நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (70). இவா், வேலை சம்பந்தமாக பெங்களூருக்கு கடந்த 12-ஆம் தேதி சென்றுள்ளாா். அங்கிருந்து புதன்கிழமை திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்துள்ளது.
உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன், 15 கிலோ வெள்ளி, வீட்டிலிருந்த குளிா்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.
இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நாகராஜன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மா்ம நபா்கள் 2 போ் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்றதும், திருட்டில் ஈடுபட்டது அதேபகுதியைச் சோ்ந்த குமாா், சுரேஷ் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், போலீஸாா் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகியுள்ளனா். இருவரையும் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...