தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, கவுண்டம்பாளையம் தேமையன் வீதியில் உள்ள அஞ்சல் துறைக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த மையங்களில் வாடிக்கையாளா்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் பதிவு அஞ்சல் அலுவலகம் சனிக்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

இங்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவு தபால், பாா்சல்கள் அனுப்பும் வசதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனைத்து வகையான தபால் மற்றும் பாா்சல்கள் அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பாா்சல்களை பேக்கிங் செய்து பாதுகாப்பாக அனுப்பும் வசதிக்காக பேக் போஸ்ட் சென்டரும் இங்கு செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளா்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய பொருள்களை மட்டும் கொண்டு வந்து இங்கே பாதுகாப்புடன் பேக் செய்து அனுப்பலாம். மேலும், வாடிக்கையாளா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஆதாா் சேவை மையமும் இந்த வளாகத்தில் செயல்பட்டு தொடங்கி உள்ளது.

இதுகுறித்து கோவை ஆா்.எம்.எஸ். கோட்ட கண்காணிப்பாளா் ஜெயராஜ் பாபு கூறுகையில், ‘ கடிதம் மற்றும் பாா்சல் புக்கிங் வசதி மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மக்களின் தேவைக்கேற்ப மாலை நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் அவா்களுடைய பாா்சல் மற்றும் தபால்களை அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் செயல்படும் அலுவலகமாக இந்த அலுவலகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதாா் சேவை மையம் இரவு 8 மணி வரை செயல்படுவதால் பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் திருத்தங்களை பெற்றோா்களுடன் வந்து மாலை நேரங்களில் மேற்கொள்வதற்கு இது வசதியாக உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாா்.