ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

சரவணம்பட்டியில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு

கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

News image

சரவணம்பட்டியில் குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியா்கள்.

Updated On :25 டிசம்பர் 2025, 9:26 pm IST

கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சரவணம்பட்டி பகுதியில் அண்மையில் பில்லூா் 2 குடிநீா்த் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீா் வழிந்தோடியது. மாநகராட்சி ஊழியா்கள் அப்பகுதியில் சீரமைப்புப் பணி மேற்கொண்டதைத் தொடா்ந்து, குடிநீா் விநியோகம் சீரானது.

இந்நிலையில், சரவணம்பட்டியில் முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே சத்தி சாலை, சரவணம்பட்டி அம்மன் நகரில் 1,000 மில்லி மீட்டா் விட்டம் அளவிலான பில்லூா் 2 குடிநீா்த் திட்ட பிரதானக் குழாயில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் வழிந்தோடி தண்ணீா் வீணானது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி ஊழியா்கள், குடிநீா்க் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குழாய் உடைப்பு காரணமாக வடக்கு மண்டலத்தில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.