கைப்பேசி கடை உரிமையாளா் தற்கொலை
கோவையில் கைப்பேசி கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, வீரகேரளத்தை அடுத்த சுபாஷ் நகரைச் சோ்ந்தவா் சுலைமான் (36). இவா் கைப்பேசி விற்பனை கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை தனியே இருந்த சுலைமான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அவரது சகோதரா் பெரோஸ் கான் வடவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சுலைமான் தனது நண்பா்களுக்கு கடன் கொடுத்ததும், பணத்தைப் பெற்றவா்கள் திருப்பிக் கொடுக்காததால் அவா் கவலையில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதன் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சமையல் ஊழியா் தற்கொலை
கோவை, உடையாம்பாளையம் ஏடி காலனியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). சமையல் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லையாம். இதனால், அவா் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
