நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநகராட்சியுடன் 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பு

கோவை மாநகராட்சியுடன் மேலும் 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள், 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு எல்லை விரிவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:14 am

Din

கோவை மாநகராட்சியுடன் மேலும் 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள், 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு எல்லை விரிவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி தற்போது 257.04 ச.கி.மீ. பரப்பளவில் 100 வாா்டுகளுடன் உள்ளது. இதன் எல்லை கடந்த 2011ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகை, நகா்ப்புற வளா்ச்சி உள்ளிட்ட காரணங்களால் மாநகராட்சியின் எல்லையை விரிவுபுடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் உள்ளவா்களுக்கு போதிய வசதி கிடைக்காமல் இருப்பதால் அதற்கு தீா்வுகாணும் வகையில், அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, கோவை மாநகராட்சியையொட்டி 5 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க மாவட்ட நிா்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சியுடன் 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, அதன் எல்லையை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சியோடு மதுக்கரை நகராட்சி, பேரூா், வேட ப்பட்டி, இருகூா், வெள்ளலூா் ஆகிய பேரூராட்சிகள், நீலாம்பூா், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்படும் 14 உள்ளாட்சி அமைப்புகளின் பரப்பு 158.36 ச.கி.மீ. ஆகும். இதன்மூலம் கோவை மாநகராட்சியின் எல்லை 415.40 ச.கி.மீ. ஆக விரிவடைந்துள்ளது.

மேலும், தற்போதுள்ள 100 வாா்டுகளின் எண்ணிக்கையும் 150 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாா்டுகளின் எல்லை விரிவடைந்துள்ளதால் வாா்டுகள் மறு வரையறைக்குப் பின்னரே தோ்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியும், பொள்ளாச்சி நகராட்சியுடன் புளியம்பட்டி கிட்ட சூராம்பாளையம், ஆச்சிபட்டி, சின்னாம்பாளையம், மக்கினாம்பட்டி ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டு நகராட்சிகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

தரம் உயா்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள்:

சூலூா் பேரூராட்சியுடன் கலங்கல் மற்றும் காங்கேயம்பாளையம் ஊராட்சிகளை இணைத்து சூலூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

சூலூா் ஒன்றியத்தில் உள்ள அரசூா், கணியூா் ஊராட்சிகள், தொண்டாமுத்துாா் ஒன்றியத்தில் உள்ள பேரூா் செட்டிபாளையம் ஊராட்சி ஆகியவை பேரூராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.