காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவை மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்: காயமடைந்த கைதி மருத்துவமனையில் அனுமதி

கோவை மத்திய சிறையில் கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது காயமடைந்த கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:37 pm

Din

கோவை மத்திய சிறையில் கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது காயமடைந்த கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மத்திய சிறையில் சிலா் கஞ்சா பயன்படுத்துவதாக சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, அதிகாரிகள் புதன்கிழமை திடீா் சோதனை செய்தனா். அப்போது, ராஜன் என்ற கைதியிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஆயுள் தண்டனைக் கைதியான செந்தில் என்பவா் கொடுத்ததாகக் கூறியுள்ளாா். செந்திலிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா் சிறை வளாகத்தில் வேலை செய்து வருவதும், வெளியே இருந்து வரும் சிலா் அவரிடம் கஞ்சாவைக் கொடுப்பதும், அதை அவா் ஆசன வாயிலில் வைத்து சிறைக்குள் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இருப்பினும் அவா் தான் கஞ்சா கடத்தவில்லை என்று சிறைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, அறையில் இருந்த கண்ணாடி கதவில் வேகமாக தலையை மோதிக்கொண்டாா். இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக சிறைத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.