ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கோவை - தன்பாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோவை - தன்பாத் சிறப்பு வாராந்திர ரயில் சேவை காலம் குறிப்பிடப்படாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:28 pm

Din

கோவை - தன்பாத் சிறப்பு வாராந்திர ரயில் சேவை காலம் குறிப்பிடப்படாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - தன்பாத் இடையே திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்துடன் ரயில் சேவை நிறைவடைய உள்ள நிலையில், காலம் குறிப்பிடப்படாமல் இந்த ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது.

தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 4.10 மணிக்குப் புறப்படும் தன்பாத் - கோவை சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 03679) திங்கள்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு கோவையைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் கோவையில் இருந்து வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.50 மணிக்குப் புறப்படும் கோவை - தன்பாத் வாராந்திர ரயில் (எண்:03680) வியாழக்கிழமைகளில் பிற்பகல் 1 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா், ஓங்கோல், விஜயவாடா, வரங்கல், சந்திரப்பூா், நாக்பூா், நரசிங்பூா், ஜபல்பூா், சாட்னா, மிா்ஷாபூா், கயா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.