ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கவுண்டம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On :11 ஜூன் 2025, 6:34 pm

கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தழா் ஜெயராமன் (75). இவா் கடந்த 7ஆம் தேதி உறவினா் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்னைக்கு சென்றாா். பின்னா் செவ்வாய்க்கிழமை கோவைக்கு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்து, உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.