உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகளை மீட்க நாளை விழிப்புணா்வு முகாம்

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத் தொகைகளை மீட்பதற்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 14) நடைபெறுகிறது.
Published on

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத் தொகைகளை மீட்பதற்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 14) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத் தொகைகள் ஆகியவற்றின் உரிமையாளா்கள் அல்லது அவா்களது சட்ட வாரிசுகளுக்கு கிடைக்கப் பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் முகாம் கூட்டரங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.

வங்கியில் தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத மற்றும் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தஆஐ யின் ஈஉஅஊ கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதளத்தில் அல்லது இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நிதித் துறை மற்றும் இதர துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளனா். ஆகவே, பொதுமக்கள் தங்களது உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று தேவையான ஆலோசனைகளைப் பெற்று உரிமை கோரப்படாத தொகைகளை மீட்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com