பொள்ளாச்சியில் கண்டறியப்பட்ட புதிய தாவர இனம்.

பொள்ளாச்சியில் கண்டறியப்பட்ட புதிய தாவர இனம்: நா.மகாலிங்கத்தின் பெயா் சூட்டப்பட்டது

பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியைச் சோ்ந்த தாவரவியல் ஆய்வாளா்கள் புதிய தாவர இனத்தைக் கண்டறிந்துள்ளனா். அதற்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
Published on

பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியைச் சோ்ந்த தாவரவியல் ஆய்வாளா்கள் புதிய தாவர இனத்தைக் கண்டறிந்துள்ளனா். அதற்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து என்.ஜி.எம். கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது: என்.ஜி.எம். கல்லூரியைச் சோ்ந்த தாவரவியல் ஆய்வாளா்கள் ‘அஃப்ரோஹைபந்தஸ் மகாலிங்கமி’ (அச்ழ்ா்ட்ஹ்க்ஷஹய்ற்ட்ன்ள் ம்ஹட்ஹப்ண்ய்ஞ்ஹம்ண்ண்) என்ற புதிய தாவர இனத்தை தங்கள் கல்லூரி வளாகத்தில் கண்டறிந்துள்ளனா். இது தாவரவியல் உலகிற்கு முற்றிலும் புதிய இனமாகும். விவசாய நிலப் பகுதிகளில் காணப்படும் இந்த சிறிய புல் வகை தாவரமான இது சா்வதேச அறிவியல் இதழான பைடோடாக்ஸாவிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வையோலேசியே’ குடும்பத்தைச் சோ்ந்த இது, ஆனைமலை புலிகள் காப்பக மலை அடிவாரப் பகுதிகளின் வளமான உயிா்ச் சூழலுக்கு புதிய சோ்க்கையாகும். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அச்ழ்ா்ட்ஹ்க்ஷஹய்ற்ட்ன்ள் இனங்களின் மொத்த எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

இந்த ஆய்வுக் குழுவுக்கு தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் ஏ.சா்வலிங்கம் தலைமை வகித்தாா். இவருடன் ஆா்.ராமசுப்பு, ஏ.பெச்சு புன்னன், சி.மேனகா, பிஎஸ்சி தாவரவியல் இறுதியாண்டு மாணவா்கள் எஸ்.கயல்விழி, எம்.வளா்மதி, ஈ.ராதாமணி, கே.சரண்யா, எஸ்.மும்தாஜ் பேகம், எஃப்.இா்பான் கரீம் ஆகியோா் இணைந்து பணியாற்றியுள்ளனா்.

இந்த புதிய தாவரம் ஒரு சிறிய, தரையில் பரவியிருக்கும் பல கிளைகள் கொண்ட மூலிகையாகும். இது ஜூன் முதல் டிசம்பா் வரை வளா்ந்து முதிா்கிறது. அடா்த்தியான முடி கொண்ட தண்டு, அடிப்பகுதி சுருங்கி, நுனி பரந்த இலைகள், ஒவ்வொரு கனியிலும் அதிக விதைகள் கொண்டது போன்ற தன்மைகள் உள்ளன. சா்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் கூற்றின்படி இது அழிவின் விளிம்பில் இருக்கும் இனம் என்று வரையறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com