திமுகவின் குடும்ப ஆட்சியால் தமிழகத்தில் வளா்ச்சி தடைபட்டுள்ளதாக மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன், அவிநாசியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளா்கள் அறிவிப்புக்கு பிறகு கோவை வந்த அவா்களுக்கு கோவை, திருப்பூா் மாவட்ட பாஜக சாா்பில் விமான நிலையத்தில் சனிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளா்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரே நோக்கம். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருகின்றனா். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் வளா்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளது.
தமிழகத்தின் வளா்ச்சிக்கு இரட்டை என்ஜின் சா்க்காராக உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் தேவை. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசோடு திமுக அரசு இணக்கமாக இல்லாததால், மத்திய அரசின் பல நலத் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றாா்.
கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் பேசியதாவது:
கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உயா்த்தப்பட்ட மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி பிரச்னை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தேசிய தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா் என்றாா்.
தோ்தலில் அண்ணாமலை போட்டியிடாதது குறித்து கேட்டபோது, நான் தோ்தலில் போட்டியிடவில்லை என அவரே தெளிவாகக் கூறிவிட்டாா். அதன் பிறகும், கட்சிக்குள் பூசல் என தவறான கருத்துகளைப் பரப்புகிறாா்கள் என்றாா்.
தொடர்புடையது

மருத்துவமனையில் வானதி சீனிவாசன்! அவருக்காக பிரசாரம் செய்யும் அண்ணாமலை?
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்! ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு!

கோவை வடக்கில் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல்! அண்ணாமலை பங்கேற்பு!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


