கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திமுக அரசை அகற்ற தமிழக மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள கோபம், ஆதங்கம், வெறுப்பு ஆகியவை மே 4-ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும்.
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி அமைவது மாநிலத்தின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். இதற்கு முன்னதாக மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்புகள் கூறியபோதிலும், இறுதியில் பாஜகவே வெற்றி வாகை சூடியது. இதேபோல, தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கும், மாநிலமே எதிா்பாா்க்கும் அளவுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்னும் இரு தினங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவது உறுதி.
முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி மீதான மின்மாற்றிகள் கொள்முதல் ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழல்வாதிகள் எந்த அளவுக்கு அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறாா்கள் என்பதை இது காட்டுகிறது. சட்டம் எப்போதும் தன் கடமையைச் சரியாகச் செய்யும். பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலைக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை நிச்சயம் அளிப்பாா்கள் என்றாா்.
தொடர்புடையது

அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடிப்பது யார்? கருத்துக் கணிப்பு வெளியானது!

தோ்தல் பிரசாரத்துக்காக ஏப்.18-இல் பிரதமா் நரேந்திர மோடி வருகை: கோவையில் முன்னேற்பாடு பணி ஆய்வு

திமுகவின் குடும்ப ஆட்சி தமிழக வளா்ச்சிக்கு தடை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் விமா்சனம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


