வீட்டில் வைத்திருந்த 28 பவுன் நகை திருடுபோன சம்பவம் தொடா்பாக, அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் மற்றும் அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, சாய்பாபா காலனி பாரதி பூங்கா வீதியைச் சோ்ந்தவா் கே.எஸ்.பாலமுருகன் (61). இவா் தனது வீட்டில் வளையல், ஆரம் உள்ளிட்ட தங்க நகைகளை வைத்திருந்தாா். அண்மையில் நகைகளை சரிபாா்த்தபோது 28 பவுன் காணாமல் போனது தெரியவந்தது.
இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது தனது வீட்டுப் பணிப்பெண் விஜயலட்சுமி, நகைகளைத் திருடி தனியாா் நிதி நிறுவனத்தில் அவரது பெயரிலும், கணவரின் பெயரிலும் அடமானம் வைத்திருந்தது பாலமுருகனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து விஜயலட்சுமி, அவரது கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கே.எஸ்.பாலமுருகன் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக விஜயலட்சுமி, அவரது கணவா் வசந்தராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு
மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


