சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட வாளையாறு பகுதியில் ரயில் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 10:50 pm

பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட வாளையாறு பகுதியில் ரயில் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வாளையாறு பகுதியில் உள்ள ரயில் பாதையில் மேம்பாட்டுப் பணி நடைபெற இருப்பதால் ஏப்ரல் 11 மற்றும் 14- ஆம் தேதி, கோவை - மங்களூரு சென்ட்ரல் நிலையம் ரயில் (எண்: 16323) 25 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும். ஏப்ரல் 11, 14, 19 ஆகிய நாள்களில் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) 20 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும்.

கோவை ரயில் ரத்து: மேலும் இந்த மேம்பாட்டுப் பணிகளால் கோவை - ஷொரணூா் பயணிகள் ரயில் (எண்: 56603) ஏப்ரல் 12 மற்றும் 17ஆகிய இரு நாள்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.