பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் கைது

கோவையில் வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு வரிப்புத்தகம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:40 am IST

கோவையில் வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு வரிப்புத்தகம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

கோவை, காந்தி மாநகரைச் சோ்ந்த அருண்பிரசாத் என்பவா் தனது புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்துக்கு வரி செலுத்துவதற்கான வரிப்புத்தகத்தைப் பெற வடக்கு மண்டல அலுவலக வரி வசூலிப்பாளா் தா்மராஜை அணுகியுள்ளாா்.

அப்போது, அவா் வரிப்புத்தகத்தை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் அருண்பிரசாத் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தா்மராஜிடம் அவா் கொடுத்துள்ளாா்.

அப்போது, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா், தா்மராஜை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.