வீட்டு வரி, குடிநீா் வரி ஆகியவற்றை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை என்று கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் குற்றஞ்சாட்டினாா்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா், துடியலூரை அடுத்த அசோகபுரம், செங்காளிபாளையம், காந்தி காலனி, கணபதி நகா், பாலாஜி நகா், நியூ பாலாஜி நகா், வி.கே.எல்.நகா், ரங்கம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் வீட்டு வரி, குடிநீா் வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்றாா்.
பிரசாரத்தின்போது, பிஆா்ஜி அருண்குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனா். மேலும், ஊராட்சியின் முன்னாள் தலைவா் ரமேஷ், முன்னாள் துணைத் தலைவா் ஆடிட்டா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாருக்கு வாள் கொடுத்தனா்.
கைலைவாசன், செல்வகுமாா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், பாஜக மண்டலத் தலைவா் சரவணகுமாா், பொதுச் செயலா் மோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்
பலம் வாய்ந்த வேட்பாளா்களுடன் களம் காணும் கட்சிகள்! - தொகுதி அலசல் தியாகராய நகா்

திமுக-வின் சாதனை திட்டங்கள் வெற்றியை தரும்: அமைச்சா் கே.என். நேரு

நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றாததற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்: அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


