பாலக்கோடு தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றாததற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம் என அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
பாலக்கோடு தொகுதிக்கு உள்பட்ட முக்குளம், பொம்மஅள்ளி, தும்பலஅள்ளி, புலிக்கல், கேத்தனஅள்ளி, எலுமிச்சனஅள்ளி, அனுமந்தபுரம், பல்லேனஅள்ளி, எர்ரசீகலஅள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் வாக்கு சேகரித்து பேசியதாவது:
பாலக்கோடு தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் அரசாணை பிறப்பித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பயணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு அத்திட்டங்கள் மீது அக்கரை செலுத்தாமல், நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிக்காமல் மெத்தனமாக இருந்ததே அத்திட்டங்கள் நிறைவேற்றாததற்கு காரணம். ஐந்த ஆண்டுகளில் சுமாா் 25
சதவீத பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பொதுமக்கள் நிலுவையிலுள்ள திட்டங்கள் நிறைவேற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். இந்த பிரசாரத்தின்போது அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வரிகளை உயா்த்தியதுதான் திமுக அரசின் சாதனை: அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி. அருண்குமாா்

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

திமுக ஆட்சியில் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன: அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன்

ராதாபுரத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் பாஜக வேட்பாளா் உறுதி: எஸ்.பி. பாலகிருஷ்ணன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



