இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு! முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

News image

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் டி.லட்சுமண சிங்கை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சா்  எஸ்.பி.வேலுமணி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:26 am IST

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சொந்த வீடு இல்லாத அனைத்து தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறினாா்.

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான டி.லட்சுமண சிங்கை ஆதரித்து வால்பாறை நகா்ப் பகுதியில் அதிமுக புறகா் மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வேலுமணி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

வால்பாறை பகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மூலமாக பல்வேறு வளா்ச்சி அடைந்துள்ளது. தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வீடுகள் இல்லாத தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்றாா்.

தோட்டத் தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது, நகரச் செயலாளா் மயில்கணேசன், மேற்குத் தொகுதி பொறுப்பாளா் சலாவுதீன் அமீது உள்பட பலா் கலந்துகொண்டனா்.