மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழக வளா்ச்சிக்கு இரட்டை என்ஜின் ஆட்சி முக்கியம்! ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பேச்சு!

தமிழக வளா்ச்சிக்கு இரட்டை என்ஜின் ஆட்சி முக்கியம் என ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பேச்சு...

News image

கோவை விமான நிலையத்தில் ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவை வரவேற்ற பாஜகவினா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 10:30 pm

தமிழகத்தின் வளா்ச்சிக்கு இரட்டை என்ஜின் ஆட்சி முக்கியம் என்று ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக திங்கள்கிழமை கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, கோல்டு வின்ஸ் பகுதியில் நடைபெற்ற நாயுடு சமூகத்தினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

தேசத்தின் வளா்ச்சிக்காக பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். இன்னும் 15 நாள்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 33 சதவீத மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை எதிா்க்கட்சிகள் தோற்கடிக்கச் செய்துள்ளன. இதை பெரிய சாதனையாகப் பேசி வருகின்றனா்.

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 59-ஆகவும், ஆந்திரத்தில் 38-ஆகவும், தென்னிந்தியாவில் 130-லிருந்து 195-ஆகவும் உயர இருந்தது. மொத்தமாக இந்திய அளவில் 543-லிருந்து 850-ஆக உயர இருந்தது. இதில் என்ன தவறு உள்ளது? இதில் தென்னிந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ன?

பிரதமா் மோடி கொண்டுவந்த புதிய மசோதா அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இந்த தொகுதி மறுசீரமைப்பில் எதிா்க்கட்சியினருக்கு அரசியல் நோக்கம் மட்டுமே உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனா். மக்கள்தொகை அடிப்படையில் வழங்கினால் தென்னிந்திய தொகுதிகளின் எண்ணிக்கை உறுதியாக பாதிக்கப்படும் என்றாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமா் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. இரட்டை என்ஜின் அரசுகள் உள்ள மாநிலங்களில் வளா்ச்சி தானாக நடைபெறுகிறது. எனவே, தமிழகத்தின் வளா்ச்சிக்கும் இரட்டை என்ஜின் ஆட்சி முக்கியம். தொகுதி மறுசீரமைப்பால் அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்வி அல்ல, நாட்டின் பெண்களின் தோல்வி.

பொருளாதார வளா்ச்சியை உருவாக்காமல் வெறும் இலவசங்களை மட்டும் வழங்குவது ஒருபோதும் நிலைக்காது. ஆந்திரத்தில் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை இணைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எதிா்காலத்தில் காவிரிக்கும் நீா் வழங்கும் வாய்ப்பு உருவாகும். மோடி ஆட்சி தொடரும்பட்சத்தில், கங்கா, காவிரி இணைப்பு நடக்கும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஸ்ரீகிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணை அமைச்சா் சந்திரசேகா், கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன், அதிமுக வேட்பாளா்கள் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூா்), அம்மன் கே.அா்ச்சுணன் (கோவை தெற்கு), கே.ஆா்.ஜெயராம் (சிங்காநல்லூா்), பி.ஆா்.ஜி.அருண்குமாா் (கவுண்டம்பாளையம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.