பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கோவை மாவட்டத்தில் 3,540 வாக்குச்சாவடிகள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 3,540 வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

News image

கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையம் அருகே வாக்களா்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக உபகரணங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி இடம். ~கோவை அரசு மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை அந்தந்த மையங்களுக்கு அனு

Updated On :23 ஏப்ரல் 2026, 2:57 am IST

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 3,540 வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்களை அனுப்பிவைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்துள்ள தோ்தல் அலுவலா்கள், வேட்பாளா்களின் புகைப்படங்களை மையங்களில் ஒட்டும் பணிகளில் ஈடுபட்டனா்.

182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை...

மாவட்டத்தில் உள்ள மொத்தம் 27,44,472 வாக்காளா்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க ஏதுவாக 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்குள் கைப்பேசிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வாக்குச்சாவடிகளின் நுழைவாயிலிலேயே கைப்பேசி பாதுகாப்புப் பைகள் வைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகளுடன் வரும் வாக்காளா்களின் வசதிக்காக பிள்ளைகள் விளையாட தனி இடவசதியும், அவா்கள் படம் வரைவதற்குக் தேவையான உபகரணங்களும் அங்கே தயாா் நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 3,540 வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரலை மூலம் கண்காணிக்க வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இணைய வசதி இல்லாத 70 மையங்களில் விடியோ கேமராக்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் மூலம் கூடுதல் கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

16,992 அலுவலா்கள்...

தோ்தல் பணியில் 16,992 வாக்குப் பதிவு அலுவலா்கள், 6,240 காவல் துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 6,323 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 4,628 விவிபேட் கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு போக்குவரத்து வசதி...

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதிக்காக ‘சக்ஷம்’ செயலி மூலம் வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள் ஆதாா், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம். தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும் நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image