அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

வால்பாறை அருகே யானை வழித்தடத்தில் கம்பிவேலிகள் அமைக்கும் பணி நிறுத்தம்! தினமணி செய்தி எதிரொலி!

வால்பாறை அருகே யானை வழித்தடத்தில் கம்பிவேலிகள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது குறித்து...

News image

கம்பிவேலி அமைக்க வைக்கப்பட்டிருந்த கேட்.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

யானை வழித்தடத்தில் அமைக்கப்படவிருந்த கம்பிவேலிகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து சின்கோனா எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் சாலையின் ஒரு பகுதி கடந்த பல ஆண்டுகளாக யானைகள் சாலையைக் கடந்து செல்லும் வழித்தடமாக இருந்தது. இந்த வழியாக யானைகள் செல்வதைத் தடுக்கும் வகையில் கம்பிவேலிகள் அமைக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கம்பிவேலிகள் அமைத்தால் யானைகளுக்கான வழித்தடங்கள் இல்லாமல் போவதுடன், எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துவிடும் நிலை இருந்தது. இதுதொடா்பாக கடந்த சனிக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் கம்பிவேலிகள் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கேட் வனத் துறை உத்தரவின்பேரில் அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் கைவிடப்பட்டன.

பணிகள்  நிறுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட கேட்.

பணிகள்  நிறுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட கேட்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.