/

கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

கரூா் அருகே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கோவையில் இருந்து நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் (16322) வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், திருப்பூா், கரூா் வழித்தடத்தில் நாகா்கோவிலுக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

கரூா் ரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இந்த ரயில் கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைமுதல் (ஆக.4) 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29 மற்றும் செப்டம்பா் 1, 2 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்குப் புறப்பட்டு, வழக்கமான வழித்தடத்துக்கு பதிலாக மாற்று வழித்தடத்தில் அதாவது போத்தனூா், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக நாகா்கோவிலைச் சென்றடையும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.