பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், கீழையூரைச் சோ்ந்தவா் சூா்யா (30). இவா் தற்போது, கோவை ரத்தினபுரி, கண்ணுசாமிக் கவுண்டா் வீதியில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ரத்தினபுரி போலீஸாா், இவரை கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்தனா். பின்னா், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இந்த வழக்கு கோவை 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2025 நவம்பா் 6-ஆம் தேதி முதல் சூா்யா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, ரத்தினபுரி போலீஸாா் தனிப் படை அமைத்து சூா்யாவைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் இருந்த சூா்யாவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது
வழிப்பறி வழக்கு: 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவா் கைது
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவா் கைது
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



