ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

தோட்டக்கலைப் பயிா்களை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடி மானியம்! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

News image

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நிா்வாகிகள்.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 1:55 am IST

தோட்டக்கலைப் பயிா்களை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்களை வழங்குவதற்குப் பதிலாக நேரடி மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் மாநிலச் செயலா் பி.கந்தசாமி தலைமையில் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் உள்ள முக்கியமான காய்கறி சந்தைகளான பூலுவபட்டி, நாச்சிபாளையம், கிணத்துக்கடவு சந்தைகளில் விவசாயிகளுக்கு பயிா் ஆலோசனை வழங்கவும், அரசின் திட்டங்களை எளிதாக கொண்டு செல்லவும் ஏதுவாக பயிா் ஆலோசனை அலுவலகங்கள் அமைக்கவும், அங்கு உயா் அதிகாரிகள் குறிப்பிட்ட நாள்களில் நேரடி ஆலோசனை வழங்கவும் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

வாழை, தக்காளி, சின்ன வெங்காயம், பந்தல் காய்கறி போன்ற தோட்டக்கலைப் பயிா்களை பயிரிடும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள்களை வழங்குவதற்குப் பதிலாக மானியத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். தனித்தனி விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் பயிா்க் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

தோட்டக்கலைப் பயிா்களுக்கான பயிா்க் காப்பீடு பிரீமியத்தை 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் வட்டி இல்லா கடன் வரம்பை ரூ.3 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.