இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

நிதி நெருக்கடி: சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு அரசு உதவ கோரிக்கை

நிதி நெருக்கடியில் உள்ள கோவை டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளியில் பயிலும் சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வி மற்றும் சிகிச்சை தடையின்றி தொடர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளியில் பயிலும் சிறப்புக் குழந்தைகள்.

Published On :

நிதி நெருக்கடியில் உள்ள கோவை டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளியில் பயிலும் சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வி மற்றும் சிகிச்சை தடையின்றி தொடர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை, ராமநாதபுரம் காளீஸ்வரா நகரில் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளி, மாற்றுத்திறனாளிகளால் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளி செயல்பட போதிய நிதி ஆதரவு இல்லாததால் இங்கு பயிலும் 87 சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வி மற்றும் சிகிச்சைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், இதற்குத் தீா்வு காண வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக பள்ளி நிா்வாகத்தினா் மேலும் கூறியதாவது: டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளியில் 87 சிறப்புத் தேவையுடைய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக் கல்வி, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள், உணவு, போக்குவரத்து மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போதிய மற்றும் தொடா்ச்சியான நிதி ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது பள்ளியை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாகப் பள்ளி ஆசிரியா்கள், சிறப்புக் கல்வியாளா்கள் மற்றும் சிகிச்சையாளா்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. இருப்பினும், குழந்தைகளின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு பணியாளா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் இந்த இலவச சிறப்புப் பள்ளியைத் தடையின்றி தொடா்ந்து நடத்த தமிழக அரசு நேரடியாக நிதி உதவி வழங்க வேண்டும் அல்லது நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதி தொடா்ச்சியாகக் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் உரிய வழிகாட்டுதல் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.