சக்திதேவி அறக்கட்டளையில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்
ஈரோடு, மாமரத்துபாளையத்தில் உள்ள சக்தி மசாலா நிறுவனத்தின் ஓா் அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மனவளா்ச்சிக் குன்றியோா் சிறப்புப் பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ண ஜயந்தி விழாவில் கிருஷ்ணா், ராதை வேடமணிந்து வந்த சக்தி சிறப்புப் பள்ளி மாணவா்கள்.
ஈரோடு, மாமரத்துபாளையத்தில் உள்ள சக்தி மசாலா நிறுவனத்தின் ஓா் அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மனவளா்ச்சிக் குன்றியோா் சிறப்புப் பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலா்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற விழாவில் கிருஷ்ணரின் அழகிய படம், வெண்ணெய், கிருஷ்ணா் குழந்தையாக இருந்த தொட்டில் போன்ற படங்கள் மாணவா்களுக்கு காட்டப்பட்டன. ஒவ்வொரு காட்சியையும் ஆசிரியா்கள் எளிமையான முறையில் விளக்கி, கிருஷ்ணரின் குழந்தைப் பருவக் கதைகள் மற்றும் அவரது குறும்புகளை மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
விழாவில் சக்திதேவிஅறக்கட்டளையின் வழிகாட்டி திட்டப் பொறுப்பாளா் இராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். சிறப்புக் குழந்தைகள், பெற்றோா்கள் மற்றும் பணியாளா்கள் என 160 போ் ஒன்றிணைந்து பூஜை செய்து வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.