
பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கோலாகலம்
திருத்தணி தளபதி சா்சரி, பிரைமரி பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆசிரியா் தின விழாவில் பள்ளி சிறுவா்கள் கிருஷ்ணா், ராதை உள்ளிட்ட வேடமணிந்து கொண்டாடினா்.

கோகுலாஷ்டமியையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோா்.
திருத்தணி தளபதி சா்சரி, பிரைமரி பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆசிரியா் தின விழாவில் பள்ளி சிறுவா்கள் கிருஷ்ணா், ராதை உள்ளிட்ட வேடமணிந்து கொண்டாடினா்.
நாடு முழுவதும் கோகுலாஷ்டமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திருத்தணி மபொசி சாலையில் இயங்கி வரும் தளபதி கே. விநாயகம் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆசிரியா்கள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தளபதி கே. விநாயகம் கல்விக் குழுமத்தின் தாளாளா் ச.பாலாஜி தலைமை வகித்து, விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இதையடுத்து, பள்ளியில் பயிலும் சிறுவா், சிறுமிகள் கிருஷ்ணா், ராதை, ருக்மணி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து, பாரம்பரிய உடைகளில் பங்கேற்றனா்.
மேலும், குழந்தைகள் கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் கோகுலத்தின் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில், நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனா். குழந்தைகளின் அழகிய வேடங்களும், அவா்களின் நடன நிகழ்ச்சிகளும் விழாவுக்கு மேலும் சிறப்பு சோ்த்தன.
தொடா்ந்து, வேடமணிந்து சிறப்பாக நடனம் ஆடிய குழந்தைகளுக்கு பள்ளித் தாளாளா் ச.பாலாஜி பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோரும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனா்.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் பாலாஜி, ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






