காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

செப்.4-இல் எஸ்.வி. கோசம்ரக்ஷன்சாலாவில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வர கோசம்ரக்ஷன்சாலாவில் செப். 4 -இல் கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

TTD

திருப்பதி - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வர கோசம்ரக்ஷன்சாலாவில் செப். 4 -இல் கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோபூஜையுடன், பக்தியை மேம்படுத்தும் வகையில் வேதங்கள், பஜனைகள், கோலாட்டங்கள், சங்கீா்த்தனங்கள், ஹரிகதை மற்றும் பிற நிகழ்ச்சிகளையும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தா்களிடையே இந்த பாரம்பரியத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.

கோகுலம் போன்று தோற்றமளிக்கும் வகையில் பசுக்கொடியானது மாந்தோட்டங்கள், மலா் மாலைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்களால் அலங்கரிக்கப்படுகிறது. பசுக்களை அழகாக அலங்கரித்து, பக்தா்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

பசுக்களுக்கு வெல்லம், அரிசி மற்றும் தீவனம் அளித்து பக்தா்கள் பசு சேவையில் பங்கேற்கலாம். பசு அன்னைக்குக் கிரகசதனம் செய்வது மங்களகரமானது என்று நம்பும் பக்தா்கள் இந்த புனிதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொள்கிறது.

காலை 5 மணிக்கு ஸ்ரீ வேணுகோபாலசுவாமிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு வீணை இசையும், 7.30 மணிக்கு வேத பாராயணமும் நடைபெறும். 8 மணிக்கு, தேவஸ்தானத்தின் தசாசாகித்ய திட்டக் கலைஞா்களால் பஜன்களும் கோலாட்டங்களும், அன்னமாச்சாா்ய திட்டக் கலைஞா்களால் ஸ்ரீஹரி சங்கீா்த்தனங்களும் நிகழ்த்தப்படும்.

காலை 10 மணிக்கு, ஸ்ரீ வேணுகோபாலசுவாமி முன்னிலையில் கோபூஜையும் ஆரத்தியும் நடைபெறும். பின்னா் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தா்கள் சுவாமியைத் தரிசித்து பிரசாதம் பெறுவாா்கள்.

மாலையில், தேவஸ்தானத்தின் இந்து தா்மபிரசார பரிஷத்தின் ஏற்பாட்டில், ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லீலைகளையும் கோசேவையின் முக்கியத்துவத்தையும் விளக்கும் ஹரிகதை நடத்தப்படும்.

பகவான் கிருஷ்ணரின் நாம பாராயணம், பசு அன்னையின் சேவை மற்றும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படவுள்ள கோகுலாஷ்டமி விழாக்களில், பக்தா்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு திருமலை தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.