குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சாலை விபத்தில் விமான நிலைய ஊழியா் உயிரிழப்பு

கோவையில் சாலை மைய தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விமான நிலைய ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:39 am IST

கோவையில் சாலை மைய தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விமான நிலைய ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜிஜோ (30). இவா், துடியலூா் பகுதியில் தங்கி, கோவை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவுப் பணிக்குச் சென்ற ஜிஜோ, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை காலை வீட்டுக்கு புறப்பட்டாா்.

கோவை- அவிநாசி சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த காரை அவா் முந்த முயன்றபோது, அதன் கண்ணாடி இவரது இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. இதில் நிலைதடுமாறிய அவரது வாகனம் சாலை மைய தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜிஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.