பட்டுக்கோட்டை அருகே சனிக்கிழமை மாலை சாலையின் குறுக்கே நாய் வந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தாா்.
பட்டுக்கோட்டை வட்டம், சுரங்காடு வடக்குப் பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் (39). இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை மாலை பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நிலைதடுமாறிய அவரது இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சிலம்பரசனை அக்கம்பக்கத்தினா் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







