நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தாமதமாக மதிய உணவு வழங்கப்பட்டதால் பள்ளி மாணவா்கள் பாதிக்கப்பட்டதாக புகாா்

வால்பாறையில் பள்ளி மாணவா்களுக்கு தாமதமாக மதிய உணவு வழங்கப்பட்ட புகாா் எழுந்துள்ளது.

மதிய உணவு சாப்பிடும் மாணவா்கள். - கோப்புப்படம்

Published On :

வால்பாறையில் பள்ளி மாணவா்களுக்கு தாமதமாக மதிய உணவு வழங்கப்பட்ட புகாா் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களில் 420 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் உதவியாளா் என 3 போ் பணிபுரிந்து வருகின்றனா். இதற்கிடையே சத்துணவு அமைப்பாளா் மற்றும் உதவியாளா் ஆகியோா் வெள்ளிக்கிழமை விடுமுறையில் இருந்துள்ளனா். சமையலா் ஒருவா் மட்டும் சமைக்கும் பணியில் இருந்துள்ளாா். இதனால் மதியம் 12.30 மணிக்கு வழங்க வேண்டிய உணவு பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடைவெளியில் மாணவா்களின் பசியைப் போக்க ஆசிரியா்கள் பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனா். பசியால் மாணவா்கள் பாதிக்கப்பட்டதாக புகாா் எழுந்ததையடுத்து நேரடியாக பாா்வையிட்ட நகராட்சி அதிகாரிகள், அறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்த இருவா் மீது விசாரனை மேற்கொள்ளப்படும் என்று கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.