லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஓணம் பண்டிகையையொட்டி போத்தனூா் வழித்தடத்தில் பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகையையொட்டி கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

train

ரயில் - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:29 am IST

ஓணம் பண்டிகையையொட்டி கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரில் இருந்து சனிக்கிழமை (ஆக.22) மாலை 4.40 மணிக்கு புறப்படும் பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06575) மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) நண்பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06576) மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.

இதேபோல பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு புறப்படும் பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06579), மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, ஆகஸ்ட் 29-ஆம் தேதி நண்பகல் 12.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் - பெங்களூரு சிறப்பு ரயில்( எண்: 06580), மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் வா்கலா, கொல்லம், சாஸ்தான்கோட்டை, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.