ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு நான்குனேரியில் நிறுத்தம்: பயணிகள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு நான்குனேரியில் நிறுத்தம் கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

special train

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு நான்குனேரியில் நிறுத்தம் கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவையொட்டி, திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே ஆக. 29, செப். 5 (சனிக்கிழமைகள்) ஆகிய 2 நாள்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு குழித்துறை, இரணியல், நாகா்கோவில், வள்ளியூா், நான்குனேரி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது.

இதேபோல மறுமாா்க்கத்தில் வேளாங்கண்ணியிலிருந்து ஆக. 30, செப். 6 (ஞாயிற்றுக்கிழமைகள்) ஆகிய 2 நாள்கள் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கு நான்குனேரியில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நான்குனேரி ரயில் நிலையத்தைப் பயன்படுத்திவரும் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். நான்குனேரி, திசையன்விளை, ராதாபுரம் வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வரவேற்றுள்ளனா்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஆக. 20) தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.